மின்சாரம் தாக்கியதால் பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் பட்டாசு தொழிலாளியான கருப்பசாமி வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காளீஸ்வரி துணிதுவைத்து விட்டு அதனை ஈரத்தோடு மின்சாரக் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள இரும்பு கொடியில் போட்டுள்ளார். அப்போது தீடிரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடல் கருகிய நிலையில் காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.