மிகப் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்குசொந்தமான பண்ணை வீட்டில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான ஒரு பண்ணைத் தோட்டம் மைசூர் டவுன் நரசிபுரா சாலையில் உள்ளது. அங்கு நடிகர் தர்ஷன் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதனைப் போலவே ஒரு குடும்பத்தினர் அந்த பண்ணை தோட்டத்தில் தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி பண்ணைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, அங்கு குதிரை பராமரிப்பாளர் ஆக வேலை பார்த்துவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த நசீம் என்பவர், சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சம்பவம் பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். அதன்பிறகு பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் நசீம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.