Categories
அரசியல் மாநில செய்திகள்

ம.நீ.மவுக்கு ‘டார்ச்லைட்’….. மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் கமல்!!

உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்..

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். செப்.,23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.. 25-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக, உள்ளிட்ட  கட்சிகள்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.. அதேசமயம் பாமக, ம.நீ.ம, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தேர்தலுக்கு தயாராகி வருகின்றன..

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்..

அமமுகவுக்கு குக்கர் சின்னமும், மதிமுகவிற்கு பம்பரம் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |