தெய்வதிருமகள் சாரா தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சாரா அர்ஜுன். இதைத் தொடர்ந்து சைவம், விழித்திரு ஆகிய படங்களில் நடித்து வந்த அவர் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
மேலும் நடிகை சாரா அர்ஜுன் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாரா அர்ஜுன் தன் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் தமிழ் சினிமாவில் வெளியான தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜ் அர்ஜூனின் மகள் தான் சாரா அர்ஜுன் என்பதை பலரும் இந்த புகைப்படத்தை கண்டு தான் அறிந்துள்ளனர்.