Categories
சினிமா தமிழ் சினிமா

எனது பெயரை பயன்படுத்தக்கூடாது…. தந்தை மீது நடிகர் விஜய் திடீர் வழக்கு….!!!!

கடந்த ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கின்ற கட்சி தொடங்கப்பட்டது. அதன்பிறகு கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து இயக்கப் பொதுச்செயலாளர், பொருளாளர்களான அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அவரின் குடும்பத்தினர் மட்டுமன்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |