உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22.88 கோடியாக அதிகரித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸானது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகையே ஆட்டி படைத்துள்ளது. இந்த கொரோனா வைரஸினால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்கையை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 46 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆகும். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 20 கோடியே 14 லட்சம் பேர் ஆவர்.
மேலும், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.88 கோடி பேர் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.