Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… ஒரே நாளில் ரிலீஸாகும் முன்னணி நடிகர்களின் படங்கள்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பது கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப பாசம் மற்றும் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் கிறிஸ்மஸ் பண்டிகையின்போது வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேபோல் தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படமும் கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆகவே இப்படி இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது ஒன்றுக்கொன்று கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |