நடிகர் சிம்புவின் 48-வது படத்தை கோகுல் இயக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தில் ரிலீஸாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு இணைந்து நடித்துள்ள மஹா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் . இதைத்தொடர்ந்து இவர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
Unveiling the much anticipated title of #VelsFilms next with @SilambarasanTR_ " #CoronaKumar "
Directed by @DirectorGokul 🥳A Special Tribute Song to #CSK from the team Coming Tomorrow 🦁
Produced by Dr @IshariKGanesh @VelsFilmIntl #SilambarasanTR #STR48 #ThinkSTR48 pic.twitter.com/tpv6Wo6eIQ
— Think Music (@thinkmusicindia) September 18, 2021
இந்நிலையில் நடிகர் சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.