கல்யாணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் மும்பை தனியார் நிறுவன பணியாளாரான சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலைமுத்து தனது உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புதுப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது சுடலைமுத்து – கண்ணகி தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த கண்ணகி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணகியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.