தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவது. இந்த மெகா முகாமில் காலை 11: 30 வரை நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.06 கோடியை தாண்டியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.. அதையொட்டி இன்று மறுபடியும் இரண்டாவது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. இன்றைய நிலவரப்படி தமிழக சுகாதாரத்துறை கையில் 15 லட்சம் டோஸ் தடுப்பூசி இருக்கிறது.. இந்த டோஸ் அனைத்தையும் செலுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது..
நேற்று வரையில் 3 கோடியே 96 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே முதல்வர் மு.க ஸ்டாலின் சைதாப்பேட்டை, தாடண்டர் நகர், ஈக்காட்டுதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.