Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு தாங்க…. தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல்  திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள பிள்ளாநத்தம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து  வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் சண்முக நகர் பகுதியில் வசிக்கும் மோனிஷா என்ற பெண்ணை ஒரு திருவிழாவில் சந்தித்துள்ளார். இதனையடுத்து சரவணனும், மோனிஷாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சரவணணும், மோனிஷாவும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்  காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சரவணனின் பெற்றோருடன் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |