மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய குற்றத்திற்காக கேரளாவை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி குருக்கள் காலனியில் இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அந்த வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியதற்காக கேரளாவை சேர்ந்த ஜெலீல் மற்றும் அவருடைய மனைவி சொமியா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபச்சாரத்திற்கு உட்பட்ட ஒரு பெண்ணையும் மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.