Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை…. ஆட்சியர் உத்தரவு….!!!

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதாக  மாவட்ட  ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இக்கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம்  20ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு முதல் 21ஆம் தேதி காலை 5.51 மணி வரை உள்ளது. ஆனால் கொரானா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் பொது மக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு  பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்  முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |