Categories
உலக செய்திகள்

“ஜி7 மாநாடு சொந்த விடுதியில் நடக்காது”…. அதிபர் ட்ரம்ப் உறுதி..!!

ஜி7 மாநாடு தனக்கு சொந்தமான விடுதியில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு ஜூன் 10 – 12ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்த மாநாடு நடத்தப்படும் இடங்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு அமெரிக்க ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் தேசிய டோரல் மியாமி’ விடுதியில் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் அமெரிக்க அதிபர் தனது தனிப்பட்ட நலன்களுக்காக அதிபர் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினர்.

Image result for US President Trump has said that the G7 summit will not be held on its own.

இந்நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டவிட்டர் பக்கத்தில், “நாட்டிற்கு நல்லது செய்யவே ட்ரம்ப் தேசிய டோரல் விடுதி தேர்வு செய்யப்பட்டது. ஆனால் வழக்கம்போல ஊடகங்களும், ஜனநாயக கட்சியினரும் இதை எதிர்க்க ஆரம்பித்தனர். ஆகவே அவர்களின் இந்த பகுத்தறிவற்ற செயல்களால் ஜி7 மாநாட்டை ட்ரம்ப் தேசிய டோரல் விடுதியில் நடத்துவது குறித்து இனி பரிசீலனை செய்யப்படமாட்டாது” என்று ட்வீட் செய்துள்ளார்.

Categories

Tech |