உத்திரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா. இவர் தன் வாடிக்கையாளர் ஒருவருக்காக நில பதிவுக்கான முத்திரை தாளை வாங்குவதற்காக ஆம்பூரில் உள்ள நில பதிவு அலுவலகத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று வந்த குரங்கு ஒன்று ரூபாய் 2 லட்சம் பணத்தையும் பறித்து கொண்டு அருகிலிருந்த மரத்தின்மேல் சென்றது. இதனால் பதறிப்போன வினோத் குமார் சர்மா பணத்தை தரும்படி குரங்கிடம் கூச்சலிட்டார். இதனால் அருகிலிருந்த பொது மக்கள் ஒன்றுகூடினர்.
இதனைத் தொடர்ந்து குரங்கு தன் கையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் கட்டு இரண்டை வக்கீலிடம் வீசியது. மீதமிருந்த ஒரு லட்சம் ரூபாயை ஒவ்வொரு தாளாக அள்ளி வீச தொடங்கியது, இதில் சுற்றி இருந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுக்கத் தொடங்கினார். பின்னர் வினோத் குமார் சர்மா தன் பணத்தை திரும்ப தரும்படி பொதுமக்களிடம் பரிதாபமாக கேட்டார். பெரும்பாலான மக்கள் பணத்தை திருப்பி அளித்தனர் அந்த தொகையை கணக்கிடும் பொழுது ரூபாய் 95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சுடன் தன் பணத்தை எடுத்து சென்றார் வழக்கறிஞர் ஷர்மா.