கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அம்மாநில அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை தரப்பட்டிருந்தது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெறும் காலம் முதல் முழு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரள அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கான இந்த சலுகைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை காலத்தை 7 நாளாக குறைத்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மூன்று மாதத்தில் குணமாகி இருந்தால் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.