தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சீரோடைப்-2 வகை டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது வேகமாக பரவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தொலைபேசி வழி ஆலோசனைகள் அளிப்பது, பரிசோதனை கருவிகளை அதிக அளவு கையிருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.