Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதியினர்…. ஓடும் பேருந்தில் பெண்கள் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கூட்டநெரிசலாக இருக்கும் பேருந்தில் நகை,பணம் போன்றவற்றை  திருடிய குற்றத்திற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் தனது மனைவி பிரேமாவுடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் சீலநாயக்கன்பட்டியிலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது தம்பதிகள் வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

மேலும் இது குறித்து பாலசுப்பிரமணியம் சேலத்தில் உள்ள டவுண் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பரிமளா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பரிமளா உள்ளிட்ட மூன்று பெண்கள் சேர்ந்து பாலசுப்பிரமணியனிடமிருந்து வைரம் மற்றும் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. இந்த 3 பெண்களும் இணைந்து கூட்டநேரிசலாக இருக்கும் பேருந்தில் பயணிகளின் உடைமைகளை திருடிவந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் 3 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |