Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து… தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தளபதி… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இயக்குனர் வம்சி சைமா விருது விழாவில் பங்கேற்ற போது அவரிடம் புதிய படம் குறித்த தகவல் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவர் ‘உங்களுக்கு விரைவில் ஒரு சூப்பரான அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்’.

https://twitter.com/i/status/1439407016699564033

Categories

Tech |