Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமி…. ஆண் நபரின் கொடூர செயல்…. வேண்டுகோள் விடுத்த போலீஸ்….!!

இரவு நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லண்டன் நாட்டில் stratford என்னும் பகுதியில் கடந்த 4ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை ஒரு ஆண் நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் அந்த சிறுமி மீது கை வைத்து தகாத செயல்களைச் செய்துள்ளார். மேலும் அவர் அந்த சிறுமியை தரதரவென இழுத்துச் சென்று நடைபாதையில் உள்ள பெஞ்ச்சின் பின்னால் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனை தற்போது போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடந்த போது அவ்வழியாக சென்றவர்களின் புகைப்படங்களையும் தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் “இந்த சம்பவம் நடந்த போது அவ்வழியாக சென்றவர்களின் புகைப்படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். அதில் உள்ள நபர்களை நீங்கள் அடையாளம் கண்டால் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அந்த தகவல் எங்களுக்கு உதவியாக இருக்கும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |