பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட கீழ்கண்ட நெறிமுறைகளை கவனத்துடன் பின்பற்றவும்,
பட்டாசுகளை கையில் வைத்தபடி கொளுத்தி விளையாடுவதை தவிர்க்கவும்.
நீளமான ஊதுபத்திகளை கொண்டு வெடிகுண்டுகளை கொளுத்தவும்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருக்கவேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்.
அதிக புகை வெளியேறும் பட்டாசுகளை வெடிக்காமல் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும்.
பட்டாசு வெடிக்கும் முன் தண்ணீர், மணல் போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளவும்.
தீக்காயம் பட்டால் உடனே தண்ணீரில் கழுவி முதலுதவி சிகிச்சை அளிக்கவும்.
ஆடையில் தீப்பிடித்தால் தரையில் உருண்டு துணியை அணைக்க முற்பட வேண்டும்.
மது அருந்திவிட்டு வெடிகுண்டுகளை தவிர்ப்பது நல்லது.
ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 108 என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.