ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைந்திருப்பதால், உயிருக்கு பயந்து கடைசி யூதரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு இடைக்கால அரசையும் அமைத்துவிட்டனர். இந்நிலையில், அங்கு வசித்த Zebulon Simantov என்ற 62 வயது யூதர், அமெரிக்கா செல்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறி, ஒரு ஹொட்டலில் தங்கியுள்ளார். அவர், அமெரிக்காவிற்கு செல்வதற்கு தேவைப்படும் ஆவணங்களை தயார் செய்யும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, Zebulon Simantov, தலிபான்களால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனினும், ஐ.எஸ் கோரசான்களால் பிரச்சனை ஏற்படும் என்று தான் அஞ்சுவதாக, கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் நகரில் இருக்கும், யூத ஜெப ஆலயத்தில் தான் Zebulon தங்கியிருந்தார். ஆனால் அமெரிக்க படைகள், வெளியேறிய பின்பு, தன் பாதுகாப்பு குறித்து அவர் வருந்தியதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், தலீபான்களால் Zebulon Simantov -வின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால், ஐ.எஸ் அமைப்பினர், தன்னை கடத்திச்சென்று கொலை செய்ய வாய்ப்புள்ளது என்ற தான் அஞ்சுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், Zebulon Simantov அமெரிக்காவிற்கு விரைவாக சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.