Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொபட்டை ஓட்டிய சிறுமி… விளையாட்டால் நடந்த விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

மொபட்டை ஓட்டிய சிறுமி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டிசெல்வி என்ற மகள் உள்ளார். 10ஆம் வகுப்பு படிக்கும் இவர் விளையாட்டுத்தனமாக வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த தனது தந்தையின் மொபட்டை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது அவரது உறவுக்கார சிறுமியான 7ஆம் வகுப்பு படிக்கும் ராகவியையும் ஏற்றிக்கொண்டு கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முத்த முயற்சி செய்த போது எதிரே வந்த மினி லாரி மொபட் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பாண்டிசெல்வி மற்றும் ராகவி பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமிகளை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்ட வசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாண்டிசெல்வி உயிரிழந்துள்ளார். தற்போது ராகவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஆண்டிபட்டி காவல்துறையினர் விபத்துகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |