தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்றது. ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடலில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.