Categories
அரசியல்

சாமியை காப்பாற்ற கட்சி இருக்கு…. பூமியை காப்பாற்ற கட்சி இருக்கா…? சீமான் கலகல…!!!

சாமியை காப்பற்ற கட்சி உள்ளது. பூமியை காப்பாற்ற கட்சி உள்ளதா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சீமான், ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகுப்பறையை தீர்மானிப்பது ஆசிரியர்கள் மட்டும் தான் அரசியல் என்பது ஒரு வாழ்வியல் நீங்கள் புரிந்து கொண்டால் மாற்றம் வந்துவிடும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நல்ல கருத்துக்களை விதைத்து விட்டால் தவறான அரசாங்கம் உருவாகாது. உருவானாலும் அது நிலைக்காது நல்ல கருத்துக்களை யார் விதைக்க முடியும் என்றால், வேளாண் குடிமகன் விதையை விதைப்பது போல அறிவு சார்ந்த கருத்துக்களை இளம் பிள்ளைகளிடத்தில் ஆசிரியர்களால் மட்டும்தான் விதைக்க முடியும். ஒரு நாட்டின் நலன் என்பது அந்நாட்டின் வீட்டில் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் எதிர்காலமே அந்த நாட்டின் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தீர்மானிப்பது ஆசிரியப் பெருமக்கள் தான். சாமியை காப்பாற்ற கட்சி உள்ளது. வாழ்கிற பூமி காப்பற்ற கட்சி இருக்கிறதா? என்பதை ஒரு முறை யோசித்துப் பாருங்கள். தாமிரம் பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேச தலைவர்கள் இருக்கிறார்களா? என்று யோசியுங்கள் என்று நகைச்சுவையோடு பேசியுள்ளார்.

Categories

Tech |