மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு, கத்தியவாடி மற்றும் ஆற்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் வருகின்ற 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதனால் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தாழனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.