மது கடையை மூட வேண்டும் என இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆங்குணம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பழகன் சென்னை மாவட்டத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தினால் சொந்த ஊருக்கு வந்து அன்பழகன் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ரூபா தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஊருக்குள் இருக்கும் மதுக்கடையை மூடவேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். தற்போது அன்பழகன் மதுக்கடைக்கு சென்று ஒரே நாளில் 2000 ரூபாய்க்கு மேலாக சாராயம் வாங்கி குடித்து வருகிறார். இதனால் தங்களின் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக மனுவின் ரூபா குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இளம்பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்டார்.