உடல்நலக்குறைவால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோட்டாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் அவரின் வீட்டில் இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென மயங்கிக் கீழே தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து முருகேசனை அவரின் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.