சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள கொரோனா குமார் படத்தின் டைட்டில் புரோமோ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் நேற்று சிம்புவின் 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
https://twitter.com/SilambarasanTR_/status/1439575041809674247
அதன்படி இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் கொரோனா குமார் படத்தின் டைட்டில் புரோமோ பாடல் வெளியாகியுள்ளது. ‘CSK சிங்கங்களா’ என்கிற இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.