அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இருக்கும் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரியப்பன், சிதம்பரம் உட்பட 4 பேர் உரிய அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து தலா 20 கிலோ சரவெடியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.