லண்டனில் இளம்பெண் சடலம் மீட்டெடுத்தது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Cator பூங்காவிற்கு அருகில் Onespace Community மையம் உள்ளது. அந்த மையத்தின் அருகில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பினும் முழு அடையாளம் காணப்படவில்லை.
இதனால் அப்பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவிக்காமல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இளம் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதற்காக போலீசார் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இது சம்பவம் தொடர்பாக இரவு 9.20 மணியளவில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவரேனும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தால் உடனே போலீசாரை தொடர்பு கொள்ளலாம். அதிலும் அவர்கள் கூறப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.