புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது.
புதுவை மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங் வேட்பாளர் புவனேஸ்வரன் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்வதாக அதிமுகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கைகளில் காங்கிரஸ் கொடுத்த டோக்கனை காட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.