Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு…. கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

பள்ளிகளை திறக்க முடிவு செய்து தேதியை அறிவித்தார் கேரள முதல்வர் பிரனாய் விஜயன்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்த நிலையில் தற்பொழுது மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. இதனைத்தொடர்ந்து கேரளாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து அங்கு பள்ளி கல்லூரிகளை நவம்பர் 1 முதல் திறக்க முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர். முதல் கட்டமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயர்நிலைப் பள்ளிகள் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் பிரனாய் விஜயன் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர்வதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Categories

Tech |