2 – வது மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 2 – வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 12 – ஆம் தேதியன்று நடைபெற்ற முகாமில் 75,643 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் 2 – வது கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் 53% பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனைத் தொடர்ந்து 100 சதவீதத்தை எட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.