சிசிடிவி கேமரா பொறுத்தற்காக சென்ற வாலிபர் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் திருமானூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக சென்ற விஜய், அங்குள்ள 17 வயது மாணவியை சிசிடிவி கேமராவின் ஒயரை சிறிது நேரம் பிடிதிருக்குமாறு கூறி மாடிக்கு அழைத்து சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் அழுதபடி கூறியுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜயை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.