Categories
உலக செய்திகள்

பொதுமக்களின் வரி பணத்தில்…. ஏற்பாடு செய்யப்பட்ட விமானம்…. பிரபல நாட்டில் எழும்பிய எதிர்ப்புகள்….!!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு நபருக்காக மட்டும் தனி பயணிகள் விமானம் பொதுமக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஒரு நபரை மட்டும் நாடு கடத்துவதற்காக 14 ஊழியர்கள் மற்றும் 218 இருக்கைகள் கொண்ட தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவானது அந்நாட்டு பொது மக்களின் வரி பணத்திலிருந்து ஏற்பாடு செய்துள்ளதால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆபரேஷன் எஸ்பார்டோ என்ற பெயரில் நாடு கடத்தப்படும் நடவடிக்கை பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டிற்குள் ஆபரேஷன் எஸ்பார்டோ திட்டத்திற்கு மொத்தம் 17.1  மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆபரேஷன் எஸ்பார்டோ திட்டத்தின் மூலம் பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள், அகதிகள் மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் என அனைவரும் நாடு கடத்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் 5 க்கும் குறைவான நபர்களை வெளியேற்ற கடந்த 2020 ஆம் ஆண்டு ஆறு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது அரசு தரப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. மேலும் அல்பேனியாவுக்கு அனுப்பப்பட்ட விமானத்தில் 121 ஊழியர்களுடன் 34 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்பின் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு 267  பயணிகளுக்கான விமானம் ஒன்றில் வெறும் மூன்று பேர் மட்டும அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குற்றவாளிகள் மற்றும் அகதிகள் வெளியேற்ற செலவிடப்பட்டுள்ள தொகையானது வீண் என நாடாளுமன்ற உறுப்பினர் David Jones  கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கிடையில் இந்த செய்தி வரி செலுத்தும் பிரித்தானியா மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என John O’Connell அறிவித்துள்ளார்.

Categories

Tech |