தீபாவளிக்கு எத்தனை மணிக்கு எந்திரிக்கிறோம் என்பதை விட தீபாவளியன்று எத்தனை மணிக்கு எந்திரிக்கணும் அப்படிங்குறதுதான் முக்கியம். ஏனென்றால் தீபாவளி அன்று காலையில பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற நான்கிலிருந்து ஆறு மணிக்குள் உங்களுடைய கங்காஸ்னம் நீங்கள் முடித்து இருக்கணும் , அன்று நீங்க நல்லெண்ணெய் தேய்த்து வென்னீரில் நீராடுவது ஒரு முக்கியமான விஷயம். பொதுவாக நாம் எதற்காக இந்த பிரம்ம முகூர்த்தத்தில் அந்த எண்ணெய் குளியல் எடுக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா அதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது பெரும்பாலும் தீபாவளி வந்து அம்மாவாசை அன்று வந்து விடும்.
அந்த அம்மாவைசையில் சூரிய உதயத்திற்குப் பிறகு நாம நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் அப்படினா, தாய் தந்தை இல்லாத குழந்தைகளாக இருந்தா பரவால்ல. இதுவே தாய் , தந்தை இருக்கிறவங்களுக்கு அப்படின்னா நல்லெண்ணெய் குளியல் ரொம்பவே தவறான விஷயம். அப்படி செய்தால் நாம் பித்ருக்களுக்கு ஒரு வகையான பாவத்தை சேர்க்கின்றோம் அப்படிங்குறது உண்மை.அதனால தான இந்த பிரம்ம முகூர்த்தம் அப்படிங்கிறது சூரிய உதயத்திற்கு முன்பாக கங்கா ஸ்நானம் எடுத்தோம் என்றால் அது நமக்கு எந்த தோஷத்தையும் தராது, அதுதான் உண்மை. அதனாலதான் அந்த நேரத்துல நாம எண்ணெய் குளியல் எடுக்கணும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க.
எண்ணெய் குளியல் எப்படி எடுக்கணும் :
தீபாவளி அன்னைக்கு என்னை குளியல் எடுக்கும் போது வீட்டுல நாம சமையலுக்கு பயன் படுத்துகின்ற நல்லெண்ணெய் எடுத்து யூஸ் பண்ணிடாதீங்க. இதுக்காக தனி என்னையும் வாங்குங்க , நல்லெண்ணையை வாங்கி அந்த எண்ணெய்யை நீங்க பயன்படுத்துங்கள். அன்னைக்கு நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ள உங்களுடைய குளியலை நீங்க முடிக்கணும். அன்று காலையில் எழுந்ததுமே கிழக்கு நோக்கி உட்கார்ந்து தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும் , பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டியது தான் ஐதீகம். பொதுவாகவே எண்ணெய் குளியல் என்பது வெண்ணில தான் எடுக்கணும்.
வென்னீர் குளியல் எப்படி தயாரிக்க வேண்டும் :
உங்களுடைய குளியலுக்கான பக்கெட்ட நல்லா வாஷ் பண்ணிருங்க. அன்னைக்கு சவரில் குளிக்க கூடாது. பக்கெட்டில் தான் குளிக்கணும் , செம்புல எடுத்து தண்ணிய விடனும். அதுதான் கங்கா ஸ்நானம் அப்படிங்கிற ஒரு அர்த்தம். அதனால சவரை அன்று யூஸ் பண்ணாதீங்க. உங்களுடைய பக்கெட்டை நல்லா வாஷ் பண்ணுங்க. வாஷ் பண்ணிட்டு , அந்த பக்கெட்டுக்கு சந்தனம் , குங்குமம் வைங்க. பின்னர் டப்ல தண்ணி ஓபன் பண்ணுங்க , தண்ணி நிறையட்டும் , அதுக்கப்புறம் அதில் ஒரே ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் போடுங்க. உங்களுடைய தண்ணீர் புனிதநீர் ஆயாச்சு. அந்த தண்ணீரில் தான் நீங்க குளிக்க போறீங்க.
குளிச்சு முடிச்ச பிறகு உங்களுடைய புத்தாடையை போட வேண்டும் . எந்த காரணம் கொண்டும் புத்தாடையை பாத்ரூமிலே வைத்து போடக்கூடாது . வெளியே வந்து தான் போடணும். அதற்குப் பிறகு உங்களுடைய புத்தாடையில் ஒரு முனையில் மஞ்சள் விடுங்க ,இதனால் உங்க புத்தாடை தோஷங்கள் நீக்கப்பட்டு புத்தாடை ஆகவே உங்களுக்கு கிடைச்சுரும்.மஞ்சள்பட்ட அந்த புத்தாடையை நீங்க போட்ட பிறகு , உங்களுடைய பூஜை ரூம்ல உங்களுடைய வழிபட பண்ணுங்க
9 அகல் விளக்கு :
பொதுவாக கார்த்திகை தீபத்தில் தான் நாம அகல்விளக்கை ஏற்றி வைப்போம். ஆனால் தீபாவளி அன்னைக்கு தான் அகல் விளக்கை ஏற்றனும் அப்படிங்குறது நிறைய பேருக்கு தெரிவதில்லை. இந்த வருஷம் நீங்கள் உங்களுடைய பூஜையறையில் 5 அகல் விளக்குகள் , அப்படி இல்லன்னா 9 அகல் விளக்குகளை ஏற்றி வையுங்க. அதற்குப் பிறகு நீங்க ஒரு சுவாமியை நினைத்து வழிபட்ட பிறகு இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பிறகு உங்களுடைய பட்டாசுகளை வெடிக்கனும்.
பட்டாசு வெடிப்பது :
பட்டாசு வெடிக்கிறது நிறையபேருக்கு ஏன் வெடிக்கிறோம்னு தெரில. நரகாசுரனுக்காக வெடிக்கிறோம்னு நினைச்சுட்டு இருக்கோம். அப்படி இல்லை அந்த பட்டாசு வெடிக்கும் போது அந்த பட்டாசோட நெருப்புல நம்மளுடைய ஆணவம் , அகங்காரம் , கோபம் , காமம் , துக்கம் இது எல்லாத்தையும் சேர்த்து எரிக்கிறோம் அப்படிங்கறது தான் உண்மை. இது எல்லாத்தையும் நாம மனசுல இருந்து தூய்மை படுத்துறோம் அப்டிங்கிறதுதான் உண்மை. நம்ம மனசுல இருக்குற எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இருந்தாலும் அது கருக்கி நாம தூக்கி போட்டுருதோம் அப்படிங்கறது தான் உண்மை.
எமதர்மன் வீட்டுக்கு சீர் கொண்டு வருவார் :
இந்த மாதிரி பட்டாசு வெடித்த பிறகு அன்றைய மதியம் உங்களுடைய உணவு , இனிப்பு பலகாரங்கள் எல்லாத்தையும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணிக்கோங்க. மாலையில் என்ன பண்ணனும்னு கேட்டீங்கன்னா உங்களுடைய வாசல்ல இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறது ரொம்ப நல்லது. ஏன்னு கேட்டீங்கன்னா தீபாவளி அன்னைக்கு எமதர்மராஜா தன்னுடைய சகோதரிக்கு சீர் கொண்டு வருவது ஒரு நடைமுறையில் இருந்ததாம். அதாவது ஒரு கதை இருக்கு , அந்த மாதிரி கொண்டு சீர் கொண்டு வரும்போது யாருடைய வீட்டில் அந்த விளக்கு இல்லையோ அந்த வீட்டைஎமதர்மராஜா இது நமக்கு தேவையில்லாத விடு அப்படின்னு நினைச்சு கிடுவாராம்.
எமன் நம்மை சகோதர , சகோதரியாக ஆக்கி கொள்வார் :
விளக்கு எரித்து அப்படினா நாம எமதர்ம ராஜா வை வரவேற்பதற்கு ஈடானது , அப்படின்னு சொல்லப்பட்டு இருக்கு. எமதர்ம ராஜாவை நாம ஏன் ? வரவேற்கனும் அப்படினு நீங்க கேட்கலாம். எமதர்மன் அப்படிங்கிற பெயர்ல தர்மம் அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கிறத நாம் யோசிப்பது இல்லை. அதாவது அந்த யமதர்ம ராஜாவை நாம வரவேற்கும் போது அந்த வீட்டுல இருக்குற பெண்கள் ஆகட்டும் , ஆண்கள் ஆகட்டும் அவர்களை எமதர்மன் தன்னுடைய சகோதர , இருவரும் அந்த மாதிரி நினைக்கும்போது அவரால் நமக்கு எந்த பாதிப்பும் வராது , சகோதரிகள் என்று நினைத்துக் கொள்வார் என்பது ஒரு பழமை கால ஐதீகம்.
நம்முடைய ஆயுளுக்கு பாதிப்பு வராது :
இதனால் எமதர்மராஜா நமக்கு துணையிருப்பார் , நமக்கு பக்க பலமாக இருப்பார் , எந்த சிரமத்தையும் , எந்தத் துன்பத்தையும் தரமாட்டார் அப்படிங்கறது தான் உண்மை. எனவே எமதர்ம ராஜாவை வரவேற்கும் விதமாக உங்களுடைய வாசலில் கோலமிட்டு , இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து யமதர்ம ராஜாவை மனசுல நினைச்சுகோங்க தவறு கிடையாது. எமன் அப்படினாலும் அவருடைய இன்னொரு பாதி தர்மம் இருக்கு. அந்த தர்மத்துக்கு கட்டுப்பட்டவர்தான் எமதர்மராஜா. எனவே தீபாவளி அன்று மாலை இரண்டு அகல் விளக்குகளை ஏற்றிவைத்து எமதர்மராஜாவை நினைக்கும் போது நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்குமே அவர் பாதுகாப்பாக இருப்பார் என்பது ஐதீகம். இந்த முறையில் தான் நீங்க வந்து தீபாவளியை இந்த வருஷம் கொண்டாட போறீங்க அப்படிங்கறத நான் மனப்பூர்வமாக நம்புறேன். எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்