நடிகை டாப்ஸி தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் வந்தான் வென்றான், காஞ்சனா-2 போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
https://www.instagram.com/p/CT9G7d1ofNc/?utm_source=ig_embed&ig_rid=f718cf7a-4ea2-441b-ac06-97027bf5914f
தற்போது டாப்ஸி, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் டாப்ஸி தனது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இரட்டை ஜடை போட்டு வெள்ளை நிற பள்ளி சீருடையில் டாப்ஸி இருக்கும் இந்த அழகிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.