சென்னை விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நபில் (24), சென்னையைச் சேர்ந்த சையத் அப்துல் கரீம்(35) ஆகியோரை சுங்கத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடமிருந்தும் ரூ. 37 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 949 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை யாருக்காகக் கடத்தி வருகின்றனர் என்பது குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.