Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மன அழுத்தத்தில் இருந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  இலக்கரிவிளை பகுதியில் தனசேகர் மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பூபதி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு தனசேகர் மார்த்தாண்டம் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த அழகு பூபதி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அழகு பூபதியின் உறவினர்கள் இது குறித்து உவரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழகு பூபதியின் சடலத்தை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |