Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மெய்மறந்து காதலியுடன் பேச்சு…. இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த காதலன்….பரபரப்பு சம்பவம் ….!!!!

நாமக்கல் மாவட்டம் , பள்ளிபாளையம் அருகே  இயங்கிவரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நூற்பாலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றார். ஆஷிக் ஒரு பெண்ணை காதலித்து வருகின்றார்.                                                                                தினந்தோறும் அந்தப் பெண்ணுடன் ஆஷிக் கைப்பேசியில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனையடுத்து அந்த நூற்பாலையில் அருகிலுள்ள கிணற்றுப் பகுதியில் நின்று கொண்டு தன் காதலியுடன் கைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார். இந்தநிலையில் ஆஷிக் கால் தவறி கிணற்றின் உள்ளே விழுந்தார். அதன் பின்னர் ஆஷிக் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.                                                                                                                    இரவு நேரம் என்பதால் யாரும் கிணற்றை எட்டிப் பார்க்கவில்லை. இரவு முழுவதும் ஆஷிக் கிணற்றில் தத்தளித்து உள்ளார். இதனையடுத்து இன்று காலையில் கிணற்றில் இருந்து சத்தம் வருவதை கேட்ட, அந்தப் பகுதி மக்கள் கிணற்றுக்குள் ஆஷிக் இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆஷிக்கை மீட்டெடுத்து பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.                                                                                                              அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் கிணற்றில் விழுந்ததில் அவரின் கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். காதலியுடன் கை பேசியில் பேசியதால் கிணற்றில் தவறி விழுந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |