Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஊரடங்கு…. எதிர்ப்பு தெரிவித்த மக்கள்…. மிளகு தெளிப்பானை பயன்படுத்திய போலீசார்….!!

கொரோனா ஊரடங்கிற்கு எதிராக திரண்ட மக்களை கட்டுப்படுத்த போலீசார் மிளகு தெளிப்பானை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பல பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 500 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆறாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்டோரியா நகரில் 700க்கும் அதிகமானோர் கொரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்டுள்ளனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் போலீசார் மிளகு தெளிப்பானை பயன்படுத்தி மக்கள் கூட்டத்தை விரட்டி அடித்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தின் போது போலீசார் 235 பேரை மெல்போர்ன் நகரில் கைது செய்துள்ளனர். மேலும் 32 பேரை போலீசார் சிட்னியில் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |