பேரிச்சைப்பழ பாயசம்
தேவையான பொருட்கள் :
பேரிச்சை – 1 கப் [விதைகள் நீக்கப்பட்டது ]
வெல்லம் – தேவைக்கேற்ப
தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் பேரிச்சையுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் மீதியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு , பேரிச்சை விழுது , கரைத்த வெல்லம் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பேரிச்சைப்பழ பாயசம் தயார் !!!