லண்டனில் காணாமல் போன ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள தெற்கு லண்டனில் எரித் என்னும் பகுதியில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேளி போலீசார் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 46 வயதான Duane Denny என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி Duane Denny காணாமல் போயுள்ளார். மேலும் அவரை 3 வாரங்களாக போலீஸ் தேடி வந்துள்ளனர். அதிலும் அவர் காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் லண்டனில் கிடைத்த சடலம் தொடர்பாக ஆய்வு செய்த போது அது Duane Denny தான் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக Duane Denny அவரின் வீட்டில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கத்தில் 47 வயதான ஒருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அதிலும் Duane Denny இறப்பு சம்பந்தமாக Reading-ல் உள்ள Hadrian Walk என்னும் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.