Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! மாற்றங்கள் உண்டாகும்….! அனுசரணை வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இன்றைய நாள் கொஞ்சம் நீங்கள் யோசித்து செயல்பட வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஞாபக மறதி காரணமாக சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகும். பார்த்து பக்குவமாக வழிநடத்த வேண்டும். பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நகை பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். புதிய முயற்சியில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலனை பெற முடியும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழல் உண்டாகும். வீடு மாற்றம் முன்னேற்றத்தை கொடுக்கும். உத்யோக மாற்றம் மனதில் சந்தோஷத்தை கொடுக்கும். ஆன்மீகப் பயணங்கள் எண்ணற்ற சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

தாய்மாமன் உறவுகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவருடைய சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அதிகாரமும் தோரணையும் உங்களிடம் இருக்கும். வெற்றிகரமான வாய்ப்புகளை உங்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள முடியும். காதல் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் மாற்றத்தை ஏற்படுத்தும். காதல் திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும். படிப்பில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: கரு நீலம் மற்றும் மஞ்சள்

Categories

Tech |