மகரம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு சில காரியங்களில் முன்னேற்றம் இருக்கும்.
இன்று காலையிலேயே கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தாரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவேண்டும். அவர்கள் சொல்கின்ற நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். மறதி ஒரு வியாதியாக இருக்கும். உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. பண வரவு சீராக இருக்கும். மற்றவர் செய்ய தயங்கும் வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர்வான பணி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இன்று நல்ல உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு சில காரியங்களில் முன்னேற்றம் இருக்கும்.
பெண்கள் தேவையற்ற பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்க்க வேண்டும். இல்லத்தில் அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். காதலை விட்டு பிடிக்க வேண்டும். காதல் குழப்பத்தை ஏற்படுத்தும். காதல் சரி வருமா வராதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். ஆனால்கல்வியில் ஆர்வம் வேண்டும். மாணவர்கள் பொறுப்பாக இருந்து எதையும் செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்