கும்பம் ராசி அன்பர்களே.! சுய முயற்சியால் மட்டுமே இன்று வெற்றியடைய கூடும்.
இன்று நினைத்தது கண்டிப்பாக நிறைவேறிவிடும். உங்களுடைய நிர்வாகத் திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வார்கள். உறவினர் வகையில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்ப்புகள் மறைந்து விடும். பகை பாராட்டியவர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்ட முடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து விடும். வேலைப் பளு அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும். நல்ல உணவு முக்கியம் சத்தான உணவு முக்கியம். சிலர் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். இறைவன் வழிபாட்டினால் எந்தவிதமான நன்மையும் நடக்கும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தாரின் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும். காலையிலேயே கலகலப்பான சூழல் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். சுய முயற்சியால் மட்டுமே இன்று வெற்றியடைய கூடும்.
அதனால் சுயமுயற்சியை அதிகப்படுத்த வேண்டும். சூழ்நிலைக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தன்னிச்சையான முடிவுகளில் தெளிவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிரச்சனைகள் பெரிதாக இருக்காது. காதல் விவகாரங்கள் மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும். பொறுமையாக இருந்தால் காதலில் வெற்றி பெற முடியும். மாணவர்கள் எதையும் துணிச்சலாக செய்வீர்கள். படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்