தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
தயிர் – 1 கப்
பால் – 1 கப்
சீரகம் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிது
எண்ணெய் – தேவைக்கேற்ப
இஞ்சி – சிறிது
மாதுளை பழம் – சிறிது
செய்முறை :
முதலில் சாதத்தை உப்பு சேர்த்து நன்கு மசித்து அதனுடன் தயிர் , காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் ,கறிவேப்பிலை , இஞ்சி ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சாதத்தில் கலந்து கொத்தமல்லித்தழை , சிறிது மாதுளை பழம் தூவி இறக்கினால் சுவையான தயிர் சாதம் தயார் !!!