பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் பதவி ஏற்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் அக்கட்சியில் இருந்து பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. இவை அனைத்தும் அம்ரித் சிங்குக்கு பிடிக்காத காரணத்தினால் அவர் தனது முதல்வர் பொறுப்பில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்திய பிறகு சரண்ஜித் சிங் சன்னியை தேர்வு செய்தனர். இந்நிலையில் அவர் இன்று பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார்.