ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரிலிருந்த கடிகாரத்தை திருடி சுமார் 28,000 திர்ஹம்களுக்கு அடுத்தவருக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்திலுள்ள பிசினஸ் பே என்னும் இடத்தில் நின்று கொண்டிருந்த காரில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் 2 இருந்துள்ளது. இதனையடுத்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரினுள் இருந்த விலை உயர்ந்த 2 கைகடிகாரங்களையும் திருடி அடுத்தவருக்கு சுமார் 28,000 திர்ஹம் என்னும் விலைக்கு விற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விலை உயர்ந்த கைக்கடிகாரம் திருடு போனது தொடர்பாக அதன் உரிமையாளர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் ஜெர்மன் நாட்டை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.
அதன் பின்பு விசாரணையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த வாலிபர் அந்த 2 விலை உயர்ந்த கைக்கடிகாரங்களையும் திருடி அடுத்தவருக்கு விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அந்த வாலிபருக்கு 28,000 திர்ஹம் அபராதமும், 3 மாதகால சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.